சீனாவின் சில நிறுவனங்களை ‘சீன ராணுவ நிறுவனங்கள்’ என்ற பட்டியலில் சேர்க்க அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் முடிவெடுத்தது. இதனைக் கடுமையாக எதிர்ப்பதாக சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 8ஆம் நாள் தெரிவித்தார்.
உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகள் மற்றும் சந்தைக் கோட்பாடுகளைப் பொருட்படுத்தாமல், தேசிய பாதுகாப்பு என்ற கருத்தை மிகைப்படுத்தி கூறிய அமெரிக்கா, சீன நிறுவனங்களின் வளர்ச்சியை காரணமின்றி தடுத்துள்ளது என்று இந்த செய்தித் தொடர்பாளர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்கா, உண்மைகளையும் விதிகளையும் மதித்து, இத்தகைய செயலை நிறுத்தி, சீன நிறுவனங்களுக்கு நியாயமான அணுகுமுறையை அளிக்க வேண்டும். அதன் நிலையை உன்னிப்புடன் கவனித்து வரும் சீனா, தொழில் நிறுவனங்களின் சட்டப்பூர்வ உரிமைகளைப் பேணிக்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.