ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா, கடந்த 2013 ஜனவரி 4.ம் தேதி உயிரிழந்தார். இதன் காரணமாக கடந்த ஆண்டு பிப்ரவரி 27.ம் தேதி நடைபெற்இடைத்தேர்தலில், காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்ற நிலையில், அவரும் டிசம்பர் 14.ம் தேதி உடல் நல்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது் முறையாக இடைத்தேர்தல் பிப்ரவரி 5.ம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் ஜனவரி 17 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு பரிசீலனை 18.01.2025 அன்று நடைபெறும். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.