பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் பிரான்ஸ் செல்கிறார், அங்கு அவர் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் உடன் பிப்ரவரி 11 அன்று பாரிஸில் நடக்கும் AI உச்சி மாநாட்டிற்குத் தலைமை தாங்குவார் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) உறுதிப்படுத்தியது.
இந்த நிகழ்வில் அமெரிக்க துணை அதிபர் மற்றும் சீனாவின் துணைப் பிரதமர் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.
பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் மக்ரோன் இரவு விருந்தையும் வழங்குவார் என்று வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
கூடுதலாக, இரு தலைவர்களும் போர் கல்லறைக்கு சென்று முதல் உலகப் போரில் போரிட்ட இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவார்கள்.
பிரான்ஸ் அதிபர் மக்ரோனுடன் ஏஐ உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார் பிரதமர் மோடி
![](https://puthiyathisaigal.com/wp-content/uploads/2025/02/l67420250207183741-tA5Mci.jpeg)