வங்கதேச நாடாளுமன்றத்துக்கு டிசம்பரில் தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில், அவாமி லீக் கட்சியின் தலைவா் ஷேக் ஹசீனா, பிரதமா் பதவியை ராஜினாமா செய்ததால், முகமது யூனுஸ் தலைமையிலான புதிய இடைக்கால அரசு பொறுப்பேற்றது. இந்நிலையில், பொதுத் தேர்தலை நடத்த வங்கதேசம் அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் கட்சி, இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸுடன் சில அதிகாரிகள் நடத்திய சந்திப்பிற்கு பிறகு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக டிசம்பரில் வங்கதேச நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அறிவித்துள்ளது.