மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது, அங்கு ஆட்சி செய்வதற்கு தனது முழு இயலாமையை பாஜக தாமதமாக ஒப்புக்கொண்டதைக் காட்டுகிறது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி நேற்று அமல்படுத்தப்பட்டது. சட்டப்பேரவையை கூட்டுவதற்கான காலக்கெடு நேற்று முன் தினத்துடன் முடிவடைந்த நிலையில், நேற்று குடியரசுத் தலைவர் ஆட்சிக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. சட்டப்பேரவையை கூட்டினால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் கொண்டுவர தயாராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது, அங்கு ஆட்சி செய்வதற்கு தனது முழு இயலாமையை பாஜக தாமதமாக ஒப்புக்கொண்டதைக் காட்டுகிறது. இப்போது, மணிப்பூருக்கான தனது நேரடிப் பொறுப்பை பிரதமர் மோடி இனி மறுக்க முடியாது.
அங்கு சென்று, அமைதியையும் இயல்பு நிலையையும் மீட்டெடுப்பதற்கான தனது திட்டத்தை மணிப்பூர் மற்றும் இந்திய மக்களுக்கு விளக்க முடிவு செய்துவிட்டாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.