சரத்குமாரின் மகள் என்று அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை வரலட்சுமி. ஆனால் தன்னுடைய கடின உழைப்பால் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து தற்போது ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். ஹீரோயினாக மட்டுமல்லாமல் வில்லியாகவும், துணிச்சல் மிகுந்த கேரக்டரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் வரலட்சுமி. இவர் நடிப்பில் 12 வருடங்களுக்கு முன்பாக எடுக்கப்பட்ட மதகஜராஜா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இதற்கிடையில் இவர் தன்னுடைய காதலரான நிக்கோலை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பேன் என்று கூறிய நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.