மகா கும்பமேளா திருவிழாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் இதுவரை 54 கோடி பேர் புனித நீராடி உள்ளதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
பிரயாக்ராஜ் நகரில் ஜனவரி 13ஆம் தேதி கும்பமேளா திருவிழா வெகு விமரிசையாக தொடங்கியது. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக நாள்தோறும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தரும் நிலையில், கடந்த 36 நாட்களில் 54 கோடி பேர் புனித நீராடியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.