சீனச் சர்வதேச வர்த்தக மேம்பாட்டு மன்றம் பிப்ரவரி 28ஆம் நாள் புதிய உலக வர்த்தகச் சர்ச்சை குறியீட்டை வெளியிட்டது.
இதன்படி, 2024ஆம் ஆண்டின் டிசம்பரில் இந்தக் குறியீடு 106ஆகும். இது, உயர் நிலையில் உள்ளது.
இக்குறியீட்டுக் கண்காணிப்பில் சேர்க்கப்பட்டுள்ள நாடுகள் மற்றும் பிரதேசங்களில், இந்தியா, பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள், முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன.
அமெரிக்காவின் உலக வர்த்தகச் சர்ச்சை நடவடிக்கைகள் மற்றும் தொடர்புடைய தொகைகள் 6 திங்கள் காலமாக முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.