ஷென்சென்-சுங்ஷான் இடைவழி போக்குவரத்துக்கு திறந்து வைப்பதற்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

சீனாவின் ஷென்சென் நகரிலிருந்து சுங்ஷான் நகருக்குச் செல்லும் ஆறு கடந்த இடைவழி ஜுன் 30ஆம் நாள் கட்டிமுடிக்கப்பட்டு போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் அனுப்பிய வாழ்த்து கடிதத்தில் இந்நிகழ்வுக்கு ஆரவாரமான வாழ்த்து தெரிவித்து,

இத்திட்டப்பணியின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் உளமார்ந்த வணக்கம் தெரிவித்தார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், ஷென்சென்-சுங்ஷான் இடைவழி, ஹாங்காங்-சுஹாய்-மக்கெள பாலத்தை அடுத்து, குவாங்தொங்-ஹாங்காங்-மக்கெள பெரிய வளைகுடா பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட மற்றுமொரு சிறந்த பெரிய போக்குவரத்து திட்டப்பணியாகும்.

கட்டுமானத்தின் போது, உலகளாவிய தொழில் நுட்ப இன்னல்களை பணியாளர்கள் சமாளித்து, பல உலக சாதனைகளை உருவாக்கியுள்ளனர் என்று சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர் கூறுகையில் அடுத்த காலக்கட்டத்தில், இந்த இடைவழியின் பங்கினை செவ்வனே வெளிக்கொணர்ந்து, குவாங்தொங்-ஹாங்காங்-மக்கெள பெரிய வளைகுடா பகுதியின் அடிப்படை வசதிகள் மற்றும் விதி அமைப்பு முறை நிலையை உயர்த்தி, பெரிய வளைகுடா பகுதின் சந்தை ஒருமைபாட்டை முன்னேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.


ஷென்சென்-சுங்ஷான் இடைவழியின் மொத்த நீளம் சுமார் 24 கிலோமீட்டர் ஆகும். இத்திட்டப்பணியின் கட்டுமானம் 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கியது. இது போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்ட பின், ஷென்செனிலிருந்து சுங்ஷானுக்குச் செல்லும் பயண நேரம், தற்போதைய சுமார் 2 மணியிலிருந்து 30 நிமிடங்கள் வரை குறைக்கப்படும்.

Please follow and like us:

You May Also Like

More From Author