மும்மொழி கொள்கைக்கு ஆதரவு திரட்டும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் புதிய கல்வி கொள்கையை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் மும்மொழி கல்வி கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதனிடையே மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் தமிழகத்திற்கு கல்வி நிதி வழங்க முடியும் என மத்திய அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. இந்த நிலையில், மும்மொழி கொள்கைக்கு ஆதரவு திரட்டும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கையெழுத்து இயக்கத்தை நேற்று தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணமாலை வெளியிட்டுள்ள பதிவில், ஏழை, எளிய குழந்தைகள், அரசுப் பள்ளிகளில் பல மொழிகள் கற்கும் கல்வி வாய்ப்பைத் தடுத்து, தனியார் பள்ளிகளில் மட்டும் பல மொழிகளைக் கற்க அனுமதிக்கும் திமுக அரசின் இரட்டை வேடத்தை வெட்ட வெளிச்சமாக்கவும், தமிழகம் முழுவதும், மும்மொழிக் கொள்கைக்கு பொதுமக்களிடையே இருக்கும் ஆதரவைத் திமுக அரசுக்கு உணர்த்தவும், தமிழக பாஜக சார்பாக, கையெழுத்து இயக்கம் இன்று சென்னையில் மூத்த தலைவர்கள் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.