சர்வதேச மகளிர் தினத்தன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, இந்திய ரயில்வேயின் மத்திய ரயில்வே பிரிவு, முதல் முறையாக முழுவதும் பெண் ஊழியர்களுடன் மும்பை-சீரடி இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸை இயக்கியது.
லோகோ பைலட், உதவி லோகோ பைலட், ரயில் மேலாளர், டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரயில் பணிப்பெண்கள் ஆகியோர் இந்தக் குழுவில் அடங்குவர்.
மத்திய ரயில்வே பயணிகள் ரயில் மேலாளர் ஸ்வேதா கோன், பெண்கள் அதிகாரமளிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, “ஒரு பெண் பிரசவம் போன்ற கடினமான பணியைச் செய்ய முடிந்தால், அவரால் எதுதான் செய்ய முடியாது?
ஒரு பெண் திறமையானவராக மாறும்போது, அவர் தனது முழு குடும்பத்தையும் உயர்த்த முடியும், நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க முடியும்.” என்று கூறினார்.
முதன்முறையாக முழுவதும் பெண் ஊழியர்களால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்
