ஹாங்காங்-ச்சூஹெய்-மக்காவ் பாலத்தின் மக்காவ் நுழைவாயிலிலுள்ள எல்லை கடந்த சரக்கு போக்குவரத்து நிலையம் 8ஆம் நாள் காலை அதிகாரப்பூர்வமாக இயங்க துவங்கியது. ஹாங்காங் மற்றும் மக்காவ் இரு இடங்களுக்கிடையிலான சரக்கு போக்குவரத்து நெடுஞ்சாலை மூலம் மேற்கொள்ளப்பட முடியும் என்பதை இது வெளிகாட்டியது.
இந்நிலையம் மக்காவ் நுழைவாயில் நிர்வாக பிரதேசத்தில் அமைந்துள்ளது. கொள்கலன் ஏற்றிச்செல்லும் பகுதி, 20 சரக்கு வண்டிகளுக்கு மின்னூட்டும் தங்குமிடங்கள், 5 குளிர் பெட்டியுடைய வண்டிகளுக்கான தங்குமிடங்கள் ஆகியவை இந்நிலையத்தில் அமைந்துள்ளன.
இந்நிலையம் அதிகாரப்பூர்வமாக இயங்கிய பிறகு, ஹாங்காங்-ச்சூஹெய்-மக்காவ் பாலத்தின் பயன்பாடு அதிகரிப்பதோடு, சரக்கு போக்குவரத்து செலவும் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.