டெல்லியை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் இன்று காலை தங்கும் விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள எம்எல்ஏ விடுதியில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர், காவல் துறை அதிகாரிகள் உடனே சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
இதுகுறித்து, “ஸ்ரீநகரில் உள்ள எம்.எல்.ஏ விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் உள்ளன, மேலும் தீயை அணைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன” என காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தீ விபத்திற்கான காரணம் சரியாக கண்ண்டறியப்படவில்லை, காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று மாலை டெல்லியில் உள்ள அலிபூர் மார்க்கெட்டில் தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்படத்தக்கது.