ஜகார்த்தா-பான்துங் அதிவிரைவு இருப்புப் பாதை வழியாக மார்ச் 3ஆம் நாள் 17 ஆயிரத்து 289 பயணிகள் பயணித்துள்ளனர். இயங்க துவங்கிய பிறகு, பயணம் மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை 20 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. பயணிகளின் ஓட்டம் தொடர்ந்து உயர்ந்த நிலையை நிலைநிறுத்தியுள்ளது என்று சீனாவின் இருப்புப் பாதை சர்வதேச நிறுவனத்திலிருந்து கிடைத்த தகவல் கூறியது.
ஜகார்த்தா-பான்துங் அதிவிரைவு இருப்புப் பாதை 2023ஆம் ஆண்டின் அக்டோபர் 17ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக இயங்க துவங்கியது.
சீனாவின் இருப்புப் பாதை சர்வதேச நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, 3ஆம் நாள் வரை, ஜகார்த்தா-பான்துங் அதிவிரைவு இருப்புப் பாதை 139 நாட்களாக பாதுகாப்பாக இயங்கி வருகிறது.
மொத்தமாக 20 இலட்சத்து 8 ஆயிரத்து 387 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். தற்போது ஜகார்த்தா-பான்துங் அதிவிரைவு இருப்புப் பாதை இயக்கத்தின் தினசரி எண்ணிக்கை ஆரம்ப நாட்களிலிருந்த 14 இலிருந்து 40 ஆக அதிகரித்துள்ளது.
பயணிகள் இருக்கைகளின் எண்ணிக்கை 8,400 இலிருந்து 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதிகபட்ச பயணிகள் வருகை விகிதம் 99.6% ஆக இருந்தது.