சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத்தொடரின் தலைமை குழு மார்ச் 10ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் 3ஆவது கூட்டத்தை நடத்தியது.
பிரதிநிதிகள் முன்வைத்த சட்ட முன்வரைவுகளைக் கையாள்வது பற்றிய அறிக்கை இக்கூட்டத்தில் கேட்டறியப்பட்டது. மார்ச் 8ஆம் நாள் 12 மணி வரை, இக்கூட்டச் செயலகம் மொத்தம் 269 சட்ட முன்வரைவுகளைப் பெற்றது. அவற்றில் 268 சட்டமியற்றல் துறையுடன் தொடர்பானவை மற்றும் 1 கண்காணிப்புப் பணியுடன் தொடர்பானது.
பிரதிநிதிகள் கொண்டுவந்துள்ள இத்தொகுதி சட்ட முன்வரைவுகள் சீன தேசிய மக்கள் பேரவையின் சிறப்புக் குழுக்களிடம் பரிசீலனைக்காக ஒப்படைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.