6வது சீனப் பொருளாதார மற்றும் சமூக மன்றத்தின் இரண்டாவது கூட்டம் மார்ச் 10ஆம் நாள் பெய்ஜிங்கில் தொடங்கியது.
இதில் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டித் துணைத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளரும் 6வது சீனப் பொருளாதார மற்றும் சமூக மன்றத்தின் தலைவருமான வாங்டோங்ஃபெங் உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில், சிந்தனைக் கிடங்கான இம்மன்றம் முழுமையாகச் செயல்படுத்தி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசின் அறிவியல் கொள்கை தீர்மானங்களுக்குச் சிறந்த சேவை செய்து, வெளிநாடுகளுடன் நட்பு பரிமாற்றங்களை ஆக்கப்பூர்வமாக மேற்கொண்டு வருகின்றது.
சீனப் பாணி நவீனமயமாக்கலை முன்னேற்றும் வகையில், ஞானத்தையும் வலிமையையும் சேகரிக்க வேண்டும் என்றார்.