ஐ.நாவின் பெண்களின் தகுநிலை ஆணையத்தின் 69வது கூட்டம் 10ஆம் நாள் நியூயார்க் மாநகரில் அமைந்துள்ள தலைமையகத்தில் நடைபெற்றது. பெய்ஜிங்கில் உலக மகளிர் கூட்டம் நடைபெற்று, இவ்வாண்டுடன் 30ஆவது ஆண்டுகள் நிறை வடைகின்றன. இதையொட்டி, பெய்ஜிங் அறிக்கை மற்றும் செயல்பணி திட்டத்தின் அமலாக்கம் குறித்து பரிசீலனை மற்றும் மதிப்பீடு செய்யப்படுகிறது.
ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரேஸ் இக்கூட்டத்தின் துவக்க விழாவில் உரைநிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில்,
கடந்த 30 ஆண்டுகளில், உலகம் தொடர்ச்சியான முன்னேற்றங்களைப் பெற்றுள்ளது. பெண் குழந்தைகளின் கல்வி நிலை உயர்த்தப்பட்டுள்ளது. மகப்பேற்றின் போது பெண்களின் உயிரிழப்பு விகிதம் குறைந்துள்ளது. இருப்பினும், வன்முறை, பாகுபாடு, பொருளாதார ஏற்றத் தாழ்வு முதலியவை உள்ளன. பல நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஆண்-பெண் விகிதாச்சார சமநிலையை உறுதிப்படுத்தி, பெண்களின் உரிமைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.