2024ஆம் ஆண்டு சீனாவின் ஷாங்காய் துறைமுகத்தில் கையாளப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 36லட்சத்து 30ஆயிரத்தை எட்டி 2023ம் ஆண்டை விட, 15விழுக்காடு அதிகரித்துள்ளது.
இந்த எண்ணிக்கை உலகளவில் முதலிடத்தை வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், அவற்றில் வெளிநாட்டு வர்த்தகத்துக்கான வாகனங்களின் எண்ணிக்கை 60விழுக்காட்டை வகித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில், ஷாங்காய் மாநகரின் சுங்கத் துறை எண்ணியல்மயமாக்கத்தை விரைவுபடுத்தி அறிவார்ந்த சுங்கத் துறை கட்டுமானத்தைப் பன்முகங்களிலும் முன்னேற்றி வருவதோடு, நிர்வாக வழிமுறைகளின் புத்தாக்கத்தையும் மேம்படுத்தி வருகிறது.
கொள்கை, இட வமைவு, துறைமுக வழித்தடங்கள் முதலிய சாதகங்களுடன், ஷாங்காய் நுழைவாயில் சீனாவின் மிகப் பெரிய வாகன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நுழைவாயிலாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.