ஷிச்சின்பிங் இத்தாலி தலைமையமைச்சருடன் சந்திப்பு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூலை 29ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இத்தாலி தலைமையமைச்சர் ஜோர்ஜியா மேலோனி அம்மையாரைச் சந்தித்தார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், சீனாவும் இத்தாலியும் பண்டைய பட்டுப்பாதையின் இரு முனைகளில் அமைந்துள்ளன.

இரு நாடுகளின் நீண்டகால நட்பார்ந்த பரிமாற்றம், கீழை மற்றும் மேலை நாகரிகங்களிடையேயான பரிமாற்றம் மற்றும் மனித குலத்தின் சமூக முன்னேற்றத்துக்கு முக்கிய பங்காற்றி வருகின்றது. சீனாவும் இத்தாலியும் பட்டுப்பாதை எழுச்சியைப் பரவல் செய்து, இரு நாட்டுறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.


மேலும் அவர் கூறுகையில், இத்தாலியுடன் இணைந்து, பொருளாதாரம் மற்றும் வர்த்தக முதலீடு, தொழிற்துறை தயாரிப்பு, அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் புத்தாக்கம் முதலிய துறைகளிலான ஒத்துழைப்புகளின் மேம்பாட்டை முன்னேற்ற சீனா விரும்புவதாகவும் தெரிவித்தார்.


மேலோனி அம்மையார் கூறுகையில், தற்போது சர்வதேச சூழ்நிலை ஆழமாக மாறி வருகிறது. உலகளாவிய சவால்களைச் சமாளிப்பதில் முக்கிய நாடான சீனா ஈடிணையற்ற பங்காற்றி வருகிறது.

சீனாவின் சர்வதேச தகுநிலை மற்றும் பங்கிற்கு இத்தாலி பெரும் முக்கியத்துவம் அளித்து, சீனாவுடன் இணைந்து மேலும் நெருக்கமான, மேலும் உயர் நிலையுடைய கூட்டாளியுறவை வளர்க்க விரும்புவதாக தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author