சட்டத்தின் ஆட்சி தொடர்பான ஷிச்சின்பிங்கின் படைப்புகள் என்ற புத்தகத்தின் முதலாவது தொகுதி, அண்மையில் சீனத் தேசியளவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாடு முதல் இது வரை, ஷிச்சின்பிங் அவர்களை மையமாக கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி, கட்சி மற்றும் நாட்டின் நீண்டகால அமைதி மற்றும் நிதானம் எனும் நெடுநோக்கு பார்வையைக் கைபிடித்து, சட்டத்தின்படி ஆட்சி முறையை முழுமைப்படுத்துவதை முன்வைத்துள்ளது. சீனாவின் சோஷலிச சட்டக் கட்டுமானத்தின் வரலாற்றுத் தன்மை மாற்றம் ஏற்பட்டு, வரலாற்றுச் சாதனைகள் பெறப்பட்டு, சட்டத்தின் ஆட்சி தொடர்பான ஷிச்சின்பிங்கின் சிந்தினை உருவாக்கப்பட்டுள்ளது.
இச்சிந்தனை, புதிய யுகத்தில் ஷிச்சின்பிங்கின் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிச சிந்தனைகளின் முக்கிய பகுதிகளில் ஒன்றாகும். சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் சட்ட ஆட்சி கட்டுமானத்திற்கான அதிகமான நடைமுறை மற்றும் அரிய அனுபவங்களின் அறிவியல்பூர்வமான தொகுப்பாகவும் இது விளங்குகிறது. சோஷலிச சட்ட ஆட்சி கட்டுமானம் மற்றும் மனித குலத்தின் சட்ட ஆட்சி நாகரிக வளர்ச்சிக்கான முறைமை ரீதியிலான கண்ணோட்டம், வரலாற்றில் இல்லாத அளவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளதை இது வெளிகாட்டியுள்ளது. மேலும், மார்க்சிசத்தின் சட்ட ஆட்சி தத்துவத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2012ஆம் ஆண்டின் டிசம்பர் திங்கள் முதல் 2025ஆம் ஆண்டின் பிப்ரவரி திங்கள் வரையான காலக்கட்டத்தில், சட்ட ஆட்சி கட்டுமானம் உள்ளிட்ட, ஷிச்சின்பிங்கின் மிக முக்கியமான, அடிப்படையான படைப்புகள் இந்த புத்தகத்தின் முதலாவது தொகுதியில் இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
