சீன ஊடகக் குழுமத்துக்கு லாவோஸ் தலைமையமைச்சர் சிறப்புப் பேட்டி

Estimated read time 1 min read

போஆவ் ஆசிய மன்றத்தின் 2025-ஆம் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்க, லாவோஸ் தலைமையமைச்சர் சோனெக்ஸே சிஃபாண்டோன் அண்மையில் சீனாவில் பயணம் மேற்கொண்டார்.

அப்போது சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்த அவர் கூறியதாவது: நடப்பு கூட்டத்தில், புவிசார் அரசியல், பாதுகாப்பு சூழ்நிலை, பிரதேச மற்றும் சர்வதேச தன்மையுடைய பொருளாதாரப் பிரச்சினை முதலியவை குறித்து விவாதம் நடத்தினோம்.

லாவோஸும், பல்வேறு வளரும் நாடுகள் மற்றும் கூட்டாளிகளும் ஒன்றுக்கொன்று பரிமாற்றம் மேற்கொண்டு, அனுபவங்களைக் கற்றுக் கொள்வதற்கு இக்கூட்டம் துணைப் புரியும் என்றார்.

மேலும் அவர் கூறும்போது, லாவோஸும், சீனாவும் அண்டை நாடுகள் மட்டுமல்லாமல், நீண்டகால மற்றும் நிதானமான ஒத்துழைப்புக் கூட்டாளிகளாகவும் திகழ்கின்றன. லாவோஸ்-சீனப் பொது எதிர்காலச் சமூகம் என்ற கருத்து, சீனாவின் உலக வளர்ச்சி முன்மொழிவுக்குப் பொருந்தியது.

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், இரு நாட்டு ஒத்துழைப்புக்கு, குறிப்பாக ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டுக் கட்டுமானத்துக்கும் வழிகாட்டினார்.

தற்போது, சீனாவுடன் கொள்கை ரீதியாக லாவோஸ்  ஆக்கமுடன் செயல்பட்டு வருகின்றது. லாவோஸ்-சீனப் பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கம், இரு நாட்டுறவை முன்னேற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.

தவிரவும், லாவோஸில் முதலீடு செய்த நாடுகளில், சீனாவின் முதலீட்டுத் தொகை மிக அதிகம். எரியாற்றல், கனிமம் தாது, சேவை, வீட்டு நிலச் சொத்து, வணிக வளாகம் முதலிய துறைகளில் சீனா முதலீடு செய்துள்ளது.

குறிப்பாக, எரியாற்றல் துறையில் சீனாவின் முதலீடு, லாவோஸின் மின்சார உற்பத்திக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. எதிர்காலத்தில், எண்ணியல் பொருளாதாரம், தூய்மையான எரியாற்றல், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகள் மேலதிக ஒத்துழைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author