இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பு  

Estimated read time 1 min read

இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை (மே 9) மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றி வருகின்றனர்.
முன்னதாக, ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்க மேற்கொண்ட முயற்சிகளை இந்தியா முறியடித்து வருவதோடு, பாகிஸ்தானிற்குள் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டது.
இந்நிலையில், தற்போதைய நிலை குறித்து விவரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.

You May Also Like

More From Author