7ஆவது தேசிய சுயவலிமை முன்மாதிரி நபர் மற்றும் மாற்றுத்திறனாளிக்கு உதவும் குழுக்களுக்கு விருது வழங்கும் மாநாடு 16ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் இதில் முக்கிய உத்தரவு விடுத்துள்ளார்.
35ஆவது மாற்றுத்திறனாளிகள் நாளின் போது, சீன மத்தியக் கமிட்டியின் சார்பில், இந்த முன்மாதிரிகள் மற்றும் ஊனமுற்றோருக்கு உதவும் மேம்பட்ட குழுகள், தனிநபர் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து, தேசியளவிலான மாற்றுத்திறனாளிகள், அவர்தம் உறவினர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு இனிமையான நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.