“ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். இருவரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) தொடர்கிறார்கள்,” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், “NDA கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். ஒரு கட்சி தலைவர் கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கலாம். ஆனால் தற்போதைய திமுக ஆட்சி மக்களுக்கு விரோதமாக செயல்படுகிறது. அதனை அகற்ற எல்லா கட்சிகளும் ஒன்றாக வேண்டும். மக்கள் நலனுக்காக அனைத்து கட்சி தலைவர்களும் கூட்டமாக முடிவெடுக்க வேண்டிய தருணம் இது,” என்றார்.
NDA கூட்டணியில் ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ். இருவரும் தொடர்கிறார்கள்: நயினார் நாகேந்திரன்
