பொதுவாக ருசிக்கும் பகட்டுக்கும் உண்ணும் பல உணவுகள் நம்மை நிரந்தர நோயாளிகளாக மாற்றி விடும் என்று பலருக்கு தெரிவதில்லை .எந்த உணவுகளால் நமக்கு என்ன பாதிப்பு என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.நாம் உண்ணும் எல்லா உணவுகளும் நம் ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல . சில உணவுகள் நம் ஆயுளைக் குறைக்கும்.
2. சில உணவுகளை உண்பதால் நீரிழிவு, இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் டிமென்ஷியா போன்ற கடுமையான சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது.
3.அந்த உணவுகள் :பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள், கார்ன்ஃப்ளேக்ஸ் மற்றும் துரித உணவுகள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவித்து நம்மை ஹாஸ்ப்பிட்டல் வாய் கொண்டு செல்லும்
4.இது போன்ற துரித உணவுகள் காரணமாக நாம் நோய்வாய்ப்பட்டு நமது ஆயுட்காலம் குறைகிறது.
5.இதை துரித உணவுகள் மூலம் ,முதலில் குடல், கணையம், கல்லீரல், சிறுநீரக பாதிப்புகள் ஏற்பட்டு நாளடைவில் உயிருக்கே ஆபத்தாக முடிந்து ஆஸ்பத்திரிக்கு அலைய வேண்டி வரும்
6.இந்த நச்சு உணவுகள் மூலம் 40 முதல் 70 வயது வரை வாழ்வதே இன்றைய காலத்தில் கடினம் என்று சுகாதார நிபுனர்கள் எச்சரிக்கின்றனர்