சீனத் தேசிய புள்ளிவிபர பணியகம் அண்மையில் வெளியிட்ட புதிய புள்ளிவிவரங்களின்படி, சீனப் பொருராதாரம் சிக்கலான வெளிப்புற நிலைமையைச் சமாளித்து ஏப்ரல் திங்களில் தொடர்ந்து சீராக வளர்ந்துள்ளது.
இக்காலத்தில் நாடளவில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் லாபம் கடந்த ஆண்டின் ஏப்ரல் திங்களை விட 6.1 விழுக்காடு அதிகரித்தது. சேவைத் துறையின் உற்பத்தி குறியீட்டு எண் கடந்த ஆண்டை விட 6 விழுக்காடு அதிகரித்தது. முழுச்சமூகத்தின் நுகர்வோர் பொருட்களின் மொத்த சில்லறை விற்பனைத்தொகை 3 இலட்சத்து 71 ஆயிரத்து 740 கோடி யுவானாகும்.
இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.1 விழுக்காடு அதிகம். வர்த்தகத் துறையின் கட்டமைப்பு தொடர்ச்சியாக மேம்பட்டுள்ளது. ஏப்ரல் திங்கள், சரக்குப் பொருட்களின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 3 இலட்சத்து 83 ஆயிரத்து 910 கோடி யுவானாகும். கடந்த ஆண்டை விட இது 5.6 விழுக்காடு அதிகம்.
அதேவேளையில், ஜனவரி முதல் ஏப்ரல் வரை நாடளவில் நகரப்புறங்களின் வேலையின்மை விகிதம் 5.2 விழுக்காடாகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததற்கு சமமாகும்.
