ரஷ்யா 479 ட்ரோன்கள் மற்றும் 20 ஏவுகணைகளை ஒரே இரவில் உக்ரைனில் ஏவியதாக திங்களன்று (ஜூன் 9) உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்கள் முதன்மையாக நாட்டின் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளை குறிவைத்தன, இது ரஷ்யாவின் கோடைகாலத் தாக்குதலில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் குறிக்கிறது.
தங்கள் வான் பாதுகாப்பு 277 ட்ரோன்கள் மற்றும் 19 ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்தது, சுமார் 10 ஏவுகணைகள் மட்டுமே அவற்றின் இலக்குகளை அடைந்தன என உக்ரைன் தெரிவித்துள்ளது. ஒரு குடிமகனுக்கு காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய விமானத் தளங்கள் மீது உக்ரைனின் சமீபத்திய ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, அதற்கு பதிலடியாக ரஷ்யா இந்த தாக்குதலை நடாத்தியுள்ளதாகத் தெரிகிறது.
உக்ரைன் தாக்குதலுக்கு பதிலடியாக ஒரே நேரத்தில் 479 ட்ரோன்களை ஏவியது ரஷ்யா
