இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் மான்செஸ்டர் மைதானத்திற்கு வந்தடைந்தனர்.
இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
மூன்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது.
இந்த போட்டிக்காகப் பயிற்சி மேற்கொள்ள இந்திய அணி வீரர்கள் மைதானத்திற்கு வந்தடைந்தனர்.