ஷாங்காயில் சர்வதேச ஒளி-ஒலி கலை இரவு நிகழ்ச்சி

Estimated read time 1 min read

சர்வதேச ஒளி-ஒலி கலை நிகழ்ச்சியின் கடைசி நடவடிக்கையான சர்வதேச ஒளி-ஒலி கலை இரவு எனும் நிகழ்வு அக்டோபர் 18ஆம் நாள் சீனாவின் ஷாங்காய் கண்காட்சி மையத்தில் நடைபெற்றது. தொழில்நுட்பப் புத்தாக்கம் கலையுடன் ஒன்றிணையும் பல சாதனைகள் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டன.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் புரப்புரைத் துறையின் துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹாய்சியோங், ஷாங்காய் மாநகராட்சித் தலைவர் ச்சூ ஜொங்மிங் ஆகியோர் இந்நிகழ்வில் உரை நிகழ்த்தி, சர்வதேச ஒளி-ஒலி கலைக்கான கூட்டு படைப்பு நடவடிக்கையைக் கூட்டாக தொடங்கினர்.

ஷென் ஹாய்சியோங் கூறுகையில், அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்கம் பற்றி சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் வழங்கிய முக்கிய உரைகளை சீன ஊடகக் குழுமம் ஆழமாக கற்றுக் கொண்டு செயல்படுத்தி, தொழில்நுட்ப புத்தாக்கத்தை விசைப்பொறியாக கொண்டு சர்வதேச முதல் தர புதிய ரக ஊடகமாக தன்னை வளர்க்க, பன்முக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எதிர்காலத்தில் சீன ஊடகக் குழுமம் ஷாங்காயுடனான உத்திநோக்கு ஒத்துழைப்பைத் தொடர்ந்து ஆழமாக்குவதோடு, பல்வேறு துறை நண்பர்களுடன் இணைந்து, தொழில்நுட்பப் புத்தாக்கத்தின் மூலம் பண்பாட்டுப் புத்தாக்கத்தை ஆதரித்து, திறப்பு மற்றும் ஒத்துழைப்பு மூலம் பரஸ்பர கற்றலை ஊக்குவித்து, கலை படைப்பாற்றலை அதிநவீன தொழில்நுட்பங்களுடன் சிறந்து ஒன்றிணைக்கும் என்று தெரிவித்தார்.

அனைத்தையும் உள்ளடக்கும் தன்மை வாய்ந்த தொடர்வல்ல மற்றும் மக்களை முதன்மையாக கொண்ட உலகளாவிய டிஜிட்டல் ஒளி-ஒலி ஒழுங்கை கட்டியெழுப்பும் வகையில், இந்நிகழ்வில் ஒளி-ஒலி நட்பு முன்னெடுப்பு வெளியிடப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author