தற்போது சீனாவின் 16ஆவது ஆர்க்டிக் பெருங்கடல் ஆய்வுப் பணியில் ஈடுபடும் தீடி எனும் பனிக்கட்டி உடைக்கும் கப்பல், ஆர்க்டிக் பயண வழித்தடத்தில் உள்நாட்டு தயாரிப்பு செயற்கைக் கோள் இணையத்தின் இயக்கத்துக்கு முந்தைய பயன்பாட்டுக்கான சோதனையை அக்டோபர் நிறைவேற்றியுள்ளது.
நடப்பு வழித்தடத்தில், ஆர்க்டிக், அன்டார்டிக்கா, சிங்காய்-திபெத் பீடபூமி ஆகியவற்றுக்கு இடையே இணையத் தகவல் தொடர்பு சரிபார்க்கும் பணி முதன்முறையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தீடி கப்பலில், சின்லிங் நிலையம், சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் லாசா ஆறு சோதனை நிலையம், இயற்கை வள அமைச்சகத்தின் பெய்ஹாய் அலுவலகம் ஆகியவற்றுக்கு இடையிலான காணொளி தொடர்பில், ஒலி மற்றும் காட்சிகள் தெளிவாகவும் தடையற்றதாகவும் உள்ளன. இந்த உள்நாட்டு தயாரிப்பு செயற்கைக் கோள் இணையத்தின் குறைந்த தாமதம் மற்றும் அதிக அலைவரிசை வாய்ந்த தொடர்பு நனவாக்கபடுவதால், உலகளவில் தகவல் தொடர்பற்ற கடைசி புள்ளி நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பூமியின் 3 துருவங்களுக்கிடையே இணையத் தொடர்பு
