உள்நோக்கத்துடன் செயல்படும் தகாய்சி சனாய்க்கு சீனா கண்டனம்

தக்காய்ச்சி சனாய் யசுகுனி கல்லறையில் அக்டோபர் 17 மற்றும் 19ஆம் நாள், அஞ்சலி செலுத்தினார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 19ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில்,

இதை சீனா உறுதியாக எதிர்க்கின்றது. ஜப்பானின் இந்த தவறான நடவடிக்கைக்கு சீனா கடுமையான கண்டனம் தெரிவிக்கின்றது என்றார்.

ஜப்பானின் தலைவர்களும் அரசியல்வாதிகளும் வரலாற்றைத் தெளிவாக அறிந்துள்ள நிலையில், யசுகுனி கல்லறையில் உள்நோக்கத்துடன் அஞ்சலி செலுத்தினார் தவறான புரிந்துணர்வை இது வெளிகாட்டியது.

ஜப்பான் வரலாற்றை சரியாக படித்து, தவறான நடவடிக்கைகளை நிறுத்தி, உண்மையான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆசிய மற்றும் அண்டை நாடுகளின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுப்பதாக மாவ் நிங் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author