உயர்தர உற்பத்தி திறன், பயனுள்ள உயர் நிலை மற்றும் உயர் தரமான உற்பத்தி முறையைக் குறிக்கிறது.
தொழில் நிறுவனங்கள் பணிப்பயனை உயர்த்துவதற்கான முக்கியமான வழியாக மட்டுமல்லாமல், நிறுவனங்களின் தொடர்ச்சியான புத்தாக்க மற்றும் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான முக்கிய சக்தியாகவும் திகழ்கின்றது என்று சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடரில் கலந்து கொண்டுள்ள சீன தேசிய மக்கள் பேரவை பிரதிநிதியும் பாவ்காங் குழுமத்தின் தலைவர் மெங் ஃபான் யிங் அம்மையார் மார்ச் 5ஆம் நாள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உயர்தர உற்பத்தி திறன், நிறுவனங்களின் மாற்றம் மற்றும் வளர்ச்சியின் திறவுகோல் மட்டுமல்ல, சீனப் பொருளாதாரத்தின் உயர்தர வளர்ச்சிக்கான முக்கிய உந்து சக்தியாகும்.
பல நிறுவனங்கள் உயர்தர உற்பத்தி திறனை ஆக்கப்பூர்வமாக முன்னேற்றி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் புத்தாக்க அளவை அதிகரிக்க வேண்டும்.
நிலையான மற்றும் ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் அதிக பங்காற்றுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.