சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி இடையேயான 19 மின்சார ரயில்கள் ரத்து

Estimated read time 1 min read

சென்னை – கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை – கும்மிடிப்பூண்டி இடையே 19 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு தண்டவாளங்களை வெட்டி அகற்றி எடுத்து உறுதிப்படுத்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜல்லி கலவைகளை அப்புறப்படுத்தி உறுதித் தன்மையை சோதித்து மீண்டும் அதன் மீது தண்டவாளத்தை அமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மண் உறுதித் தன்மை இல்லாத இடங்களில் பரிசோதனை மேற்கொண்டு அந்த குறிப்பிட்ட இடங்களில் தண்டவாளங்களை அப்புறப்படுத்தி மீண்டும் ஜல்லி கலவைகளை கொட்டி உறுதிப்படுத்தி மீண்டும் தண்டவாளத்தை பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் இடையே 19 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூளூர்பேட்டை மார்க்கத்தில் செல்லக்கூடிய ரயில்கள், மறு மார்க்கத்தில் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை மார்க்கத்தில் செல்லக்கூடிய ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மே 15, 17 ஆகிய 2 தேதிகளில் மதியம் 1.20 மணி முதல் மாலை 5.20 மணி வரை பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளதால் 19 மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொன்னேரி மீஞ்சூர் வரை மட்டுமே புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author