தமிழ் உலகின் எழுத்தாளர்களில் என்றும் ஒரு தனி இடம் உண்டு அனுராதா ரமணனுக்கு. காரணம் இவரின் கதைகளில் வரும் மாந்தர்கள் பெரும்பாலும் நமது குடும்ப உறுப்பினர்கள் போன்ற உணர்வைத் தருவதுதான்.
அத்துடன் இவரது கதைக் கருக்களும் குடும்பத்தில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளையே அடித்தளமாகக் கொண்டு காட்சிப்படுத்தும். அன்று முதல் இன்று வரை பாகுபாடின்றி கதைப் பிரியர்கள் விரும்பும் எழுத்தாளர்களில் அனுராதா ரமணனும் இடம்பெறுவார்.
அவருடைய நேர்காணலிலிருந்து ஒரு பகுதி.
கேள்வி: உங்களுடைய நிறைய கதைகள் திரைப்படங்களாயிருக்கு. உங்க கதையும், திரைக்கதையும் ஒண்ணா இருந்திருக்கா?
அனுராதா ரமணன் பதில்: ‘சிறை’யில அப்படியே இருந்திருக்கு. ‘ஒரு வீடு இரு வாசல்’ங்ற கதைல ஒரு வாசல் தான் என்னோடது, இன்னொரு வாசல் வேறொருத்தருடையது.
அதுல பால்காரி கதை என்னோடது. சின்னச் சின்ன விஷயங்கள் மாற்றம் இருக்கத்தான் செய்யும். அந்தப் படத்துல அந்தப் பொண்ணு தற்கொலை செஞ்சுக்குற மாதிரி இருக்கும். நான் எப்பவும் தற்கொலை முடிவைக் கொடுக்க மாட்டேன்.
என்னோட ரீடர்ஸ் எல்லாம் என்கிட்ட கேட்டாங்க. அது ஒண்ணுதான் முரண்பட்டது. இயக்குனர் கதையோட போக்குக்காக அப்படிப் பண்ணிட்டாரு.
கேள்வி: பெரும்பாலான கதைகள் நம்ம வாழ்க்கைல நடந்த மாதிரியே இருக்கும். அது மாதிரி உங்கக் கதைகள் யாருடைய வாழ்க்கையையாவது மாத்திருக்கா?
அனுராதா ரமணன் பதில்: முதன் முதல்ல ‘புள்ளி பிசகிய கோலம்’னு தொடர்கதை எழுதினேன். கதையோட முடிவுல அவ தற்கொலைப் பண்ற மாதிரி வச்சுட்டேன். அதை ஒரு நெசவாளர் வீட்டுப் பெண் படிச்சிருக்காங்க.
‘‘அந்த கதைல வர்ற பொண்ணோட கதை மாதிரியே என் கதையும் இருந்துச்சு. நீங்க கதைல என்ன முடிவு கொடுக்குறீங்களோ அதுதான் என்னோட முடிவுனு நினைச்சுருந்தேன்.
நீங்க இப்படி கொடுத்ததால நானும் அந்த முடிவை ஏத்துக்குறேன்’’னு போஸ்ட் கார்டு போட்டிருந்தா. நான் அந்தக் கார்ட எடுத்துக்கிட்டு அந்தப் பொண்ணு வீட்டத் தேடி நானும், என் சிஸ்டரும் போனோம்.
அந்தப் பொண்ணு சேலத்துல இருந்தாங்க. ரொம்ப ஏழ்மையான குடும்பம். ஆனா, என் கதைல இருந்த நிறைய சம்பவங்கள் அவங்களுக்கு ஒத்துப் போயிருந்தது.
அப்புறம் அவங்களுக்கு என்ன கஷ்டம்னு பாத்துட்டு பணம் வாங்காத ஒரு வக்கீல் வச்சு அந்தப் பிரச்சினைல இருந்து மீள்றதுக்காக உதவி பண்ணிட்டு அவகிட்ட ஒரு சத்தியம் பண்ணிக் கொடுத்துட்டு வந்தேன்.
இனி எந்தப் பெண்ணையும் தற்கொலை முடிவுக்குத் தள்ளமாட்டேன்னு சொல்லிட்டு வந்தேன். முப்பது வருஷமா அந்த சத்தியத்த காப்பாத்திட்டு இருக்கேன். வாசகர்கள்தானே என்னோட நாடித்துடிப்பே.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மாதப் பிறப்பை ஒட்டி அயோத்தி ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு [மேலும்…]
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை [மேலும்…]
பயணிகள் சேவைகளை மேம்படுத்துவதற்காக இந்திய ரயில்வே, RailOne என்ற புதிய சூப்பர் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் முன்பதிவு செய்யப்படாத ரயில்களுக்கான டிக்கெட்டுகளை [மேலும்…]
அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணத்தை 5 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு, [மேலும்…]
போர்ச்சுகல் நாட்டில் உள்ள கடற்கரையில், அரிதாகவே காணப்படும் “உருளை மேகம்” ஒன்று தோன்றியதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. [மேலும்…]
இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் [மேலும்…]