மலையாள சினிமாவில் மோகன்லாலின் வாரிசு ஹீரோயினாக எண்ட்ரி கொடுக்க உள்ளார்.
சிறந்த நடிகராகவும், பாக்ஸ் ஆபிஸ் கிங்காகவும் திகழும் மோகன்லாலின் மகள் விஸ்மயா, ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கும் இந்தப் படம், ஆசிர்வாத் சினிமாஸின் 37வது தயாரிப்பாகும்.
கலைத் துறையில் ஆழமான பிணைப்பு கொண்ட விஸ்மயா, இதுவரை சினிமா வெளிச்சத்திலிருந்து விலகியே இருந்தார்.
எழுத்தும் ஓவியமும் இவரது முக்கிய விருப்பங்களில் ஒன்று.
2021ல் ‘Grains of Stardust’ என்ற கவிதைத் தொகுப்பை Penguin Random House வெளியிட்டு, அது அமேசானில் பெஸ்ட் செல்லராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மோகன்லால் மகள் விஸ்மயா ஹீரோயினாக அறிமுகம்!
