வாலாஜாபேட்டை அருகே நடைபெற்ற தபசு மரம் ஏறும் விழாவில் குழந்தை வரம் வேண்டி மடிப்பிச்சை கேட்ட பெண்களுக்கு எலுமிச்சை பிரசாதமாக வழங்கப்பட்டது.
திரௌபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான 60 அடி உயர தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, தபசு மர ஊச்சிக்கு சென்ற அர்ஜூனன் வேடமணிந்த நாடக கலைஞர் ஒருவர், அங்கிருந்து எலுமிச்சை பழங்களை வீசினார். அதனை மடியேந்தி பெற்று கொண்ட பெண்கள், குழந்தை வரம் வேண்டி வழிபாடு நடத்தினார்.