பஞ்சாபில் ரயில்களை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டம்

Estimated read time 1 min read

விவசாயிகள் ‘டெல்லி சலோ’ போராட்டத்தை மூன்றாவது நாளாகத் தொடர்ந்து நடத்திவரும் நிலையில், முக்கிய கோரிக்கைகள் மீது தீர்வு காணும் வகையில், இன்று மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, பியூஷ் கோயல், நித்யானந்த் ராய் ஆகியோர் இன்று மாலை வீடியோ கான்பரன்சிங் மூலம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை சந்திக்க உள்ளனர்.

இரு தரப்பினருக்கும் இடையேயான முந்தைய சந்திப்புகள் பலனைத்தராததால், பிப்ரவரி-13, முதல் விவசாயிகள் தங்கள் எதிர்ப்புப் பேரணியைத் தொடங்கினர்.

நேற்று, புதன்கிழமை, ராஜ்நாத் சிங் மற்றும் அர்ஜுன் முண்டா உள்ளிட்ட மூத்த மத்திய அமைச்சர்கள், விவசாயிகள் போராட்டம் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகள் குறித்து விவாதித்ததாக ஆதாரங்களை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author