செவ்வாய் கிரகத்தில் உருவாகி, விண்கல் தாக்குதலால் சிதைந்தபின் 140 மில்லியன் மைல்கள் பயணம் செய்து பூமியில் விழுந்த மிகப்பெரிய பாறை ஒன்று, நியூயார்க்கில் வரும் புதன்கிழமை ஏலத்திற்கு விடப்பட உள்ளது. 25 கிலோ எடை கொண்ட இந்த செவ்வாய் பாறையின் மதிப்பு ரூ.17 கோடி முதல் ரூ.35 கோடி வரை இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பாறையை சோத் பைஸ் (Sotheby’s) எனும் பிரபல ஏல நிறுவனம், இயற்கை வரலாற்று பொருட்கள் ஏலத்தின் ஒரு பகுதியாக விற்கிறது. பாறை 3 நவம்பர் அன்று நைஜரில், சகாரா பாலைவன பகுதியில் கண்டறியப்பட்டது. இது பூமியில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய செவ்வாய் கிரக பாறையாக குறிப்பிடப்படுகிறது.
விண்கல் தாக்குதலால் செவ்வாய் கிரகத்திலிருந்து வெளியேறி, நீண்ட பயணத்திற்குப் பின் பூமியில் விழுந்த இந்த பாறை, விண்வெளி ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.