சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 14ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது வாங்யீ கூறுகையில்,
தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை இந்தியாவுடன் வலுப்படுத்த சீனா விரும்புகிறது. உலகளவில் நியாயமான, சீரான பல தரப்புவாதத்தை விரைவுபடுத்தி, பொது நலன்களைக் கொண்டு அனைவரையும் உள்ளடக்கிய உலகமயமாக்கத்தை முன்னேற்றி, தெற்குலகத்தின் பொது நலன்களைப் பேணிக்காத்து, பிரதேசத்தின் அமைதி, நிதானம், வளர்ச்சி மற்றும் செழுமையை தூண்ட வேண்டும் என்றார்.
ஜெய் சங்கர் கூறுகையில்,
இந்தியாவும் சீனாவும் வளர்ச்சி கூட்டாளிகளாக விளங்குகின்றன. போட்டியிடும் நாடுகள் அல்ல. பரஸ்பர ஒத்துழைப்புகளை ஆழமாக்க இந்தியா விரும்புவதாக கூறினார்.