இன்று (ஜூலை 20) நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளிலும் சில இடங்களில் கனமழை ஏற்படக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று மற்றும் நாளை, நகரத்தின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வானிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பான வகையில் செயல்படுமாறு வானிலை மையம் ஆலோசனை வழங்கியுள்ளது.