சென்னையின் இதயப் பகுதியான வடசென்னையில் உள்ள திருவொற்றியூரில், அருள்மிகு வடிவுடை அம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
ஞான சக்தியின் வடிவமாக இந்த தலத்தில் எழுந்தருளியுள்ள வடிவுடை அம்மன், தனது பக்தர்கள் இவ்வுலகில், ஞானமும், அதிக அறிவுடையவர்களாகவும் திகழ அருள் பாலித்து வருகிறார்.
மேலும், நாள் தோறும், உச்சிக் காலை பூஜையின் போது, சிவப்பு நிற சேலை உடுத்தி, பலாப்பழத்தை அம்மனுக்குப் படைக்கப்புகிறது.
பூலோகத்தில், முதன்முறையாக இத்திருக்கோயில் நிர்மாணிக்கப்பட்டதாகக் கருதப்படுவதால், இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமான், ஆதிபுரிஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். தோற்றத்தில், மூலவர் திருவாருர் தியாகராஜ சுவாமியை ஒத்திருப்பதால், தியாகராஜ சுவாமி என்றும் அழைக்கப்படுகிறார்.
இந்த நிலையில், ஸ்ரீதியாகராஜ சுவாமி பிரமேற்ச மாசி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா 11 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். இவ்விழா இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பய பக்தியுடன் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, கோவிலைச் சுற்றி வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.