தமிழகத்தில் அதிக மழைப்பொழிவைத் தரும் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக்கடலில் அடுத்தடுத்துக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாகி வருகின்றன.
  இதன் அறிகுறிகளாக, சில நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மாந்தா புயலாக வலுப்பெற்று, சென்னை, திருவள்ளூர் உட்பட வட தமிழக மாவட்டங்களில் மழையைப் பொழிவித்தது.
  இந்நிலையில், தற்போது அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடலில் சனிக்கிழமை (நவம்பர் 1) ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி
 
                 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
             
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                







 
                                     
                             
                             
                             
                                                         
                                
                         
                                                 
                                                 
                                                 
                                                