மேட்டூர் அணையில் இருந்து காவிரி நதிக்குள் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, தமிழகத்தின் 11 மாவட்டங்களில் உள்ள காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது மேட்டூர் அணையில் இருந்து பெரிதளவில் நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், காவிரி ஆற்றின் நீர்மட்டம் வெகுவாக உயர வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் உள்ளிட்ட காவிரி கரையோர மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.