இன்று தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை நடைபெறுகின்றது. 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹9,160-க்கும், ஒரு சவரன் ₹73,280-க்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதும், இந்திய பங்குச் சந்தைகள் சரிவடைந்துள்ளதும் காரணமாக, தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என முன்னதாகக் கூறப்பட்டிருந்தது.
எனினும், விலை நிலைதடுமாறாமல் இருந்தது மக்களுக்கு சிறு நிம்மதியைக் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். வர்த்தகர்கள் கூறுகையில், பங்குசந்தைகள் நாளையும் தொடர்ச்சியாக சரிந்தால், தங்கம் விலை உயரும் என்ற நம்பிக்கை உள்ளது.