தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தின் அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் அனைத்து வகையான மத்திய, தொடக்க கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 2,000 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு (இன்று) ஆகஸ்ட் 6 ஆம் தேதி அனைத்து முக்கிய நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 29 வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 5ஆம் தேதி ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்றும், செப்டம்பர் 12ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் என்றும் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 27 அன்று எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்பு, நவம்பர் 12 முதல் 14 ஆம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடத்தப்படவுள்ளது. நவம்பர் 15 ஆம் தேதி இறுதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். வேலை தேடுகிற தமிழக இளைஞர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.