எர்ணாகுளம் : ஆபாச திரைப்படங்களில் நடித்ததாகவும், சமூக ஊடகங்கள் மற்றும் மொபைல் செயலிகள் மூலம் அவற்றைப் பரப்பியதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, கேரள நடிகை ஸ்வேதா மேனன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதாவது, நிதி ஆதாயத்திற்காக ஆபாச திரைப்படங்களில் நடித்ததாக கேரள நடிகை ஸ்வேதா மேனன் மீது, எர்ணாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மார்ட்டின் என்ற சமூக ஆர்வலர் அளித்த புகாரில், நீதிமன்ற உத்தரவையடுத்து போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
அவர் மீது ஆபாசத் தடைச் சட்டம் மற்றும் ஐடி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை தனது ‘ரதிநிர்வேதம்’, ‘பலேரி மாணிக்யம்: ஒரு நள்ளிரவு கொலை மர்மம்’ மற்றும் ‘காளிமண்ணு’ படங்களில் நடித்த துணிச்சலான கதாபாத்திரங்களும் இந்த சர்ச்சையின் ஒரு பகுதியாக மாறியுள்ளன. இது தவிர, ஆணுறை விளம்பரத்தில் அவர் இருப்பது குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
இந்தப் பதிவுகள் இளைஞர்களை மோசமாக பாதிக்கின்றன என்றும், சமூகத்தில் தவறான செய்திகளைப் பரப்புகின்றன என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது. நடிகை ஸ்வேதா மேனன், மலையாளத் திரைப்படங்களில் முன்னணி நடிகையாகவும், தமிழ் மற்றும் இந்தி படங்களிலும் நடித்தவராவார். 2011ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான கேரள மாநில விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர்