சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் “இரு மலைகள்”எனும் கருத்து

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 20ஆண்டுகளுக்கு முன் சீனாவின் ட்செ ஜியாங் மாநில அரசாங்கத்தின் கட்சி செயலாளராக இருந்தபோது, தெளிந்த நீரும் பசுமையான மலையும் விலைமதிப்பற்ற சொத்துக்களாகும் என்ற இரு மலைகள் கோட்பாட்டை முன்வைத்தார். மக்களின் முயற்சிகள் வழியாக, இயற்கை சூழலை, பொருளாதார வளர்ச்சியுடன் ஒன்றிணைத்தால் நிலையான மூலவளத்தைக் கொண்ட தன்னிகரற்ற செல்வத்தை பெற முடியும் என்பதை இக்கருத்து வலியுறுத்துகிறது.

பாரம்பரிய மேற்கத்திய பொருளியல், நிலம், தாது உள்ளிட்ட இயற்கை மூலவளம், வற்றாத செல்வமாக கருதப்படுகின்றது. ஆய்வுதரவுகளின்படி, தற்போது உலகளவில் உயிரின சூழல் கடன், ஜி.டி.பி.இன் மொத்த மதிப்பில், 10முதல் 20விழுக்காடு வகித்துள்ளது. சமகால வாழ்க்கை தேவைக்கு பூர்த்தி செய்ய நாம் புதிய தலைமுறையினருக்கு கொண்டிருக்கும் மூலவளத்தை மீறிய பயன்படுத்தி கொண்டிருக்கிறோம் என்பதை இது குறிக்கிறது.

ஷிச்சின்பிங்கின் “இரு மலைகள்”எனும் கருத்து, செல்வம் எனும் சொல்லுக்கு ஒரு புதிய அர்த்தத்தை தந்துள்ளது. சமகால மக்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும், உயிரின சூழலின் பலன்களை புதிய தலைமுறையினருக்கு கொடுக்க வேண்டும் என்பது இதன் பொருள் ஆகும்.

ஷிச்சின்பிங்கின் இந்த கருத்து சீனாவில் நடைமுறைபடுத்தப்பட்டு, நல்ல பலன் அளித்து வருகின்றது. சீனாவின் யாங்ஜி ஆற்றுக் கழிமுகம் பகுதியில் உள்ள 120 கிராமங்களில், மாநிலங்களைத் தாண்டிய சுற்றுச்சூழல் வளத்தை ஒருங்கிணைக்கும் வளர்ச்சி அமைப்புமுறை உருவாக்கப்பட்டுள்ளது. மூங்கில் காட்டை பாதுகாப்பதன் மூலம் சீன விவசாயிகள் சுற்றுச்சூழல் வங்கியிலிருந்து பெற்றுள்ள நிதி, சர்வதேச அளவில் பொதுவாக ஏற்றுக்கொள்ள கூடிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு புள்ளிகளுக்கு மாற்றி கொள்ளப்பட்டு, ஸ்வீஸ்டானின் பனிப்பாறை பாதுகாப்பு நடவடிக்கைக்கு நிதி உதவி அளித்து வருகின்றது. சுற்றுச்சூழல் செல்வத்தை அளவிட்டு பணமாக கருதி புழக்கம் செய்யும் புதிய அமைப்புமுறை, சர்வதேச சமூகத்தில் பெரும் பாராட்டு பெற்றது. ஐ.நாவின் சுற்றுச்சூழல் திட்டமிடல் பணியகம் வெளியிட்ட உலகளாவிய பசுமை பொருளாதார மதிப்பீட்டு அறிக்கையில், சீனாவின் மாதிரி, அறிவாற்றலைத் தலைகீழாக மாற்றியுள்ளது. பசுமை வளர்ச்சி முறை மாற்றமானது, வளர்ச்சிக்கு விரைவாக அதிகரிக்க பங்காற்றஇ வருகின்றது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author