மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் வாக்கு மோசடி குற்றச்சாட்டுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் கடுமையாக மறுத்துள்ளது. வாக்குத் திருட்டு போன்ற சொற்கள் அரசியலமைப்பை அவமதிப்பதற்குச் சமம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
புதுடெல்லியில் ஊடகங்களுக்கு உரையாற்றிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், அரசியல் ஆதாயங்களுக்காக வாக்காளர்களை தவறாக வழிநடத்த தேர்தல் ஆணையம் நியாயமற்ற முறையில் பயன்படுத்தப்படுகிறது என்று கூறினார்.
தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோருடன் இணைந்து, ஆணையம் நடுநிலைமையைப் பேணுகிறது, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை ஒரே மாதிரியாக நடத்துகிறது என்று ஞானேஷ் குமார் வலியுறுத்தினார்.
“எங்களுக்கு எல்லாக் கட்சிகளும் ஒன்றுதான். எங்கள் அரசியலமைப்பு பொறுப்பிலிருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம்” என்று அவர் கூறினார்.
வாக்குத் திருட்டு போன்ற கருத்துக்கள் அரசியலமைப்பை அவமதிப்பதற்குச் சமம்; தேர்தல் ஆணையம் கருத்து
