நர்சிங் படிச்சிருக்கீங்களா ? அப்போ இந்த அரசு வேலை உங்களுக்குத்தான்..!

Estimated read time 1 min read

சிவகங்கை : மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் (NHM) கீழ் துணை சுகாதார நிலையம் நலவாழ்வு மையம், நகர் நலவாழ்வு மையம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இடைநிலை சுகாதாரப் பணியாளர் , செவிலியர், துணை செவிலியர், மருத்துவமனை பணியாளர்  ஆகிய வேலைக்கு ஆட்கள் தேவை என அறிவித்துள்ளது.

முக்கிய விவரம் 

பதவியின் பெயர்
கல்வி தகுதி 

காலியிடங்கள் எண்ணிக்கை

இடைநிலை சுகாதாரப் பணியாளர் (Mid Level Health Provider)
செவிலியர் பட்டயப்படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc Nursing) மற்றும் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தில் பதிவு செய்யப்பட ஒருங்கிணைந்த பாட திட்டம் (Integrated curriculum Registered under TN Nursing council).
3

செவிலியர் (Staff Nurse)-UHWC
செவிலியர் பட்டயப்படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc Nursing) மற்றும் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தில் பதிவு செய்யப்பட ஒருங்கிணைந்த பாட திட்டம் (Integrated curriculum Registered under TN Nursing council).
 2

துணை செவிலியர்
Auxiliary Nurse Midwife (ANM)
+2 with 2 Years Auxiliary Nurse Midwife Course à Tamilnadu Nurses and Midwifes Council வழங்கிய பதிவு சான்றிதழ்
1

மருத்துவமனை பணியாளர் (Hospital Worker)
குறைந்தபட்ச கல்வித் தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
2

 

சம்பள விவரம் 

இடைநிலை சுகாதாரப் பணியாளர் மற்றும் செவிலியர்  பணிக்கு ரூ-18,000 சம்பளம்
துணை செவிலியா ரூ .14,000 சம்பளம்
மருத்துவமனை பணியாளர் பணிக்கு 8,500 சம்பளம்.

விண்ணப்பிக்கும் முறை 

மேற்கண்ட பணியில் வேலைக்கு சேர விருப்பம் இருந்தது என்றால் நீங்கள் http:/sivaganga.nic.in
இணையதளத்திற்கு சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவேண்டும்.
பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை முழுவதுமாக படித்துவிட்டு தேவையான ஆவணங்களை வைத்து விண்ணப்பம் செய்து கொள்ளுங்கள்.
விண்ணப்பம் செய்து முடித்த பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பவேண்டும்.

முகவரி 

செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர். மாவட்ட சுகாதார அலுவலகம்,
முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக மேல்தளம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், சிவகங்கை தொலைபேசி 04575-240524.

விண்ணப்பம் அனுப்ப வரும் ஜூலை 15-ஆம் தேதி கடைசி தேதி என்பதால் அந்த தேதிக்குள் விண்ணப்பம் செய்து கொள்ளுங்கள். மேலும், தகவலை தெரிந்துகொள்ள இந்த pdf-ஐ க்ளிக் செய்யுங்கள்.

The post நர்சிங் படிச்சிருக்கீங்களா ? அப்போ இந்த அரசு வேலை உங்களுக்குத்தான்..! appeared first on Dinasuvadu.

Please follow and like us:

You May Also Like

More From Author