புதுச்சேரி நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயில், தனது தனித்துவமான சிறப்புகள் மற்றும் வளமான வரலாறு காரணமாக ஆன்மீகவாதிகளையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்து வருகிறது.
ஆளுநர் மாளிகை மற்றும் அரவிந்தர் ஆசிரமம் ஆகியவற்றுக்கு நடுவே அமைந்துள்ள இக்கோயிலில், விநாயகர் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார்.
இந்தக் கோயிலின் தனிச்சிறப்புகளில் ஒன்று, இந்தியாவில் விநாயகருக்குத் தங்கத்தால் ஆன மூலஸ்தான கோபுரம் இங்கு மட்டுமே இருப்பதுதான்.
மேலும், விநாயகருக்குத் திருக்கல்யாணம் நடைபெறும் ஒரு சில கோயில்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் விநாயகருக்குத் தங்கத்தால் ஆன மூலஸ்தான கோபுரம் இருக்கும் ஒரே இடம்
